Tuesday, September 6, 2011

சாதனை பெண்மணி பார்வதி விஸ்வநாதன்

ஐக்யா என்னும் சிறப்பு குழந்தைகளுக்கு பள்ளி நடத்தும் பார்வதி விஸ்வநாத், தன் மகன்  பிரபாகர் பற்றி சொன்னது....

டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி, டெல்லி விக்யான் பவன் அரங்கில் தேசிய விருது வழங்கப்படும் நாள். பிரபாகர் பெயர், நேஷனல் அவார்ட் என்று அறிவிக்கப்பட்டதும் நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. இந்த விருது, சர்வதேச ஊனமுற்றோர் தினத்தன்று இந்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய விருது.

இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட, பல படிகள் தாண்டி ஸ்டேட் கமிட்டி ( மாநில மந்திரி உட்பட பலர் உறுப்பினர்கள்) , மத்திய கமிட்டி (மத்திய அரசால் நியமிக்கப்பட்ட   உறுப்பினர்கள்) போன்றோர் தேர்ந்தெடுத்து அனுப்பிய பட்டியல்!!!

Role Model (ரோல் மாடல்) என்று மனவளர்ச்சி குன்றியோர் தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட பிரபாகர் என்னென்ன தகுதி பெற்றிருந்தார்? மனவளர்ச்சி குன்றிய நிலை என்று டாக்டர்களால் 28 வயதுக்கு முன்பு சொல்லப்பட்டார். டௌன் சின்றோம் (Down Syndrome) என்று தான் பேசி கொள்வார்கள். இது ஒரு விபத்து. எப்போது வேண்டுமானாலும், யாருக்கு  வேண்டுமானாலும் ஏற்படலாம். ஏழை, பணக்காரன், படித்தவர், படிக்காதவர் என்று பாகுபாடு இல்லாமல் ஏற்படக்கூடும் என்பது யாருக்கும் தெரிவதில்லை.

பிரபுவை சாதாரண குழந்தையை போல வளர்த்தோம். எல்லா வித உணவு பொருட்களையும் கொடுத்து பழக்கியதால் உடலின் எதிர்ப்புசக்தி பலப்பட்டது. இரண்டரை வயதிலே தானே சாப்பிட குளிக்க பழகி கொண்டான். எல்லா வித விளையாட்டும் விளையாடி வந்தான். அவனுடன் அவன் அண்ணனும், அப்பாவும் விளையாடுவார்கள். இது அவன் பெரியவனாகும் போது மிகவும் பலன் அளித்தது. 

படிக்க, எழுத, பள்ளி என்று வந்தபோது மறுபடி பிரச்னை. அந்த காலத்தில் 6 வயதுக்குமேல் தான் பள்ளிகளில் சேர்த்து கொள்வார்கள். ஆனால் 0-6 years தான் மிகவும் முக்கியமான பருவம்.

பிரபாகர் எப்படி வாழ்கையில் வென்றார்? இதோ அவர் தாயார் பார்வதி விஸ்வநாதன் என்ன கூறுகிறார் என்று கேட்போமா?



No comments: