Showing posts with label chair. Show all posts
Showing posts with label chair. Show all posts

Wednesday, March 7, 2012

இருக்கை உலகம்!

பார்க்கும் திசையெங்கும்

இருக்கையைத் தேடியலையும் மனிதர்கள்...

இருக்கைகளோடுதான்

வலம் வருகின்றன ஊர்திகள்...

வீட்டின் பெரும்பகுதியையும்

இருக்கைகளே அடைத்துக்கொள்கின்றன...

வீதியிலிறங்கி நடந்தாலோ

எதிர்ப்படும் எல்லாக் கடைகளும்

இருக்கைகளைக் காட்டி

இருகரம் கூப்பி அழைக்கின்றன...

மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கி

கல்விச்சாலைகள்தோறும்

இருக்கைகளுக்காகவே

செலவழிக்கப்படும் கரன்ஸிகள்...

தள்ளி விட்டோ, துண்டு போட்டோ

இருக்கையைக் கைப்பற்றும்

அறிவிக்கப்படாத போரில்

கண்டுகொள்ள யாருமில்லை;

இருக்கையின்றித் தவிக்கும் பூமியை!


கௌதமன்