Saturday, April 17, 2010

Snake and Ladder Game Of Life...

சோழிகளை நான் உருட்டினேன்,
அடடா, ஒரு சிறு ஏணி,
பின் எல்லா சோழிகளும் மூடி முகம்  கவிழ்த்தன,
பெரிய பாம்பின் வாயில் சிக்கி சர சர என கீழ் இறங்கினேன்,
அடுத்த சுழற்சியில் எல்லாம் பல் இளித்தன,
மீண்டும் ஒரு நண்பன் ஏணி மேல் ஏற்றி விட்டான்,
ஒவ்வொரு தடவை சோழிகளை வீசும் போதும்,
அதே ஆர்வம், அதே பயம், அதே வியப்பு,
சோழிகள் என் ஆசை போல் தானே விழும் என்னும் எதிர்பார்ப்பு, இறுமாப்பு,
கடைசி சோழியின் பல் இறைவன் விதிப்படி தான் என்பதை மறந்து!
அதற்காக பரமபதம் ஆட்டத்தை ஆடாமல் இருக்க முடியுமா என்ன?


2 comments:

Hitesh Rawat said...

if only i could understand

Anitha said...

Ups and downs in life compared to climbing a ladder and coming down a snake in the game named "paramapadham".