Saturday, August 25, 2012

Image Therapy to Cure Smoking

My friend Nagarajan is using Image Therapy to help his friends to quit smoking. He has also been publishing the names of his friends on Facebook who have quit smoking. Sharing few of his stories here. Hope it helps other smokers to start living life.


‘உள்ளமட்டும் அள்ளி கொள்ளும் மனம் வேண்டும். அதை சொல்லும் வண்ணம் துள்ளிச் செல்லும் உடல் வேண்டும்’. Smoking slaves'களுக்கு உடம்பே இருக்காது; அப்புறமெங்க துள்ளரது? சுவாசத்தோட போராடரதுக்கே போதும் போதுமென்றானால் சம்சாரத்தோடு எப்படி?! 

படுக்கையறை என்ன, இழுப்பும் இருமலுமாய் இருக்கிற ஆஸ்பத்திரி  வராண்டா பெஞ்சா?
--
யோசியுங்க...
வந்த பின் துடிப்பவன் ஏமாளி
வரும் முன் காப்பவன் தான் அறிவாளி.  




சொல்ல வந்ததை சொல்லி விட்டேன் இரண்டு பாகங்களாக....

இனி தெரபிக்கு வருவோம்.....அதற்கு முன் ஒரு வார்த்தை....நீங்கள் சிகரெட் விடும்போது மிகக் கடினமான முதல் தினம் உங்களை மீண்டும் குடிக்கச் சொல்லி 'நிகோடின்' மிகவும் துன்புறுத்தும்....ஏனெனில் ரத்தத்தில் அதன் அடர்த்தி குறையும் போது 'வேண்டும் வேண்டும்'.....'குடி ...குடி' என்று உங்களை வற்புறுத்தும். அந்த நேரத்தில் அதற்கு சோறு போட்டால் உடனே அடங்கி விடும்.....

நிகோடின் வற்புறுத்தினால் சிகரெட் தான் குடிக்க வேண்டுமா? மாற்று இல்லையா? 

இருக்கிறது..... மாற்று மருந்து இருக்கிறது..... அதன் பெயர் 'நிகோரெட்' சூயிங் கம். மருந்து கடைகளில் கிடைக்கிறது. (காலையில் நண்பர் இளமை இந்திரா சொன்னார், 'நிகோரெட்' வாங்க மருத்துவரின் பிரிஸ்க்ரிப்ஷன் தேவை என்று. உங்கள் அருகாமையிலிருக்கும் மருத்தவரிடம் வெளிப்படையாக சொல்லுங்கள்...அவர்கள் புரிந்து கொள்வார்கள்...) 

கையில் நிகோரெட் வைத்துக் கொள்ளுங்கள்... புகைக்க வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் ஒரு சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்லுங்கள்...அதில் உள்ள நிகோடின் உங்களுக்கு போதுமானது....ஒரு ஸ்ட்ரிப் இருபத்தி நாலு மணி நேரத்திற்குப் போதுமானது....

இருபத்தி நாலு மணி நேரம் கடந்தால் நீங்கள் சுதந்திர மனிதன்....... புகை உங்களை இனி அண்டப் போவதில்லை.....உறுதி.......

இனி இமேஜ் தெரபிக்கு வருவோம்.....

இனி நான் உங்களுக்கு ஒரு காட்சியை விவரிக்கப் போகிறேன்....படித்துக் கொண்டு வாருங்கள்....படிக்கும் போது அந்த காட்சி உங்கள் மனக்கண் முன் ஒரு சினிமா போல வரட்டும்....நீங்கள்தான் கதா நாயகன்...அதில் மாற்றமில்லை...ஒவ்வொரு வரியையும் காட்சியாய் மாற்றுங்கள்.....இதுதான் என் கடைசி ஆயுதம்....இந்த ஆயுதத்திற்கு நீகள் விழவில்லை என்றால் நானும் தோற்பேன்....அதை விட வருத்தம் நீங்கள் தோற்பது தான்....

நீங்கள் தோற்கக் கூடாது.....இரண்டு நாட்களாய் உங்களை நான் கட்டிப் போட்டு உங்கள் மனத்தை என் வசம் திருப்பி வைத்திருக்கிறேன்.....ஆக.... நீங்கள் தோற்கக் கூடாது...அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்...என்ன வேண்டுமானாலும்....உங்களை கெஞ்சுவேன்...உங்களைக் கொஞ்சுவேன்....உங்களின் காலைப் பிடிப்பேன்....உங்களைத் திட்டுவேன்...உங்களிடம் மரியாதைக் குறைவாக நடப்பேன்...என் சுதந்திரத்தை உங்கள் மீது செலுத்தி உங்களை ஆக்ரமிப்பேன்....... என்ன நடந்தாலும் நீங்கள் இதை படிப்பதை நிறுத்தக் கூடாது....

எனக்கு வாக்குறுதி கொடுங்கள்....இந்த எழுத்துக்களை கடைசி வரை படிப்பேன் என்று......

இனி இமேஜ் தெரபிக்கு வருகிறேன்.......

இனியும் நீங்கள் புகைப்பதை நிறுத்தவில்லை என்றால் காலையில் நான் இட்ட புகைப்படத்தில் உள்ள ஏதாவது ஒரு பாகம் புற்று நோய் வாய்ப்படும் என்பது உறுதி......

ஆகையால் நீங்க இறப்பது உறுதி.....

எங்கே கற்பனை செய்யுங்கள்....இந்த சினிமா உங்கள் மனத்திரையில் ஓடட்டும்.....

நீங்கள் இறந்து விட்டீர்கள்.....உங்கள் உடல் உங்கள் வீட்டில் நாடு ஹாலில் கிடத்தப் பட்டிருக்கிறது....உங்கள் உடல் மேல் மாலை போடப் பட்டிருக்கிறது....உங்கள் உடலைச் சுற்றிலும் உங்கள் சொந்தக் காரர்களின் அழுகைக் குரல்கள்....

அதோ அந்த ஓரத்தில் உங்கள் மனைவி....கண்களில் கண்ணீர் வராமல் விட்டத்தைப் பார்த்தபடி....என்ன தீங்கு செய்தாள் அவள் உங்களுக்கு? உங்களையே நம்பி உங்களுக்கு கழுத்தை நீட்டியதை விட என்ன பாவம் செய்துவிட்டாள்? உங்கள் குழந்தைகளை சுமக்கவில்லையா? உங்களுக்கு நோய் வந்தபோது அவள் உறங்காமல் உங்கள் அருகில் இருந்து பணிவிடை செய்யவில்லையா? உங்கள் மல ஜல வாந்திகளை அவள் துடைக்கவில்லையா? பதிலுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்......தீய பழக்கத்திற்கு ....உங்களின் சொந்த இன்பத்திற்காக அவளின் வாழ்க்கையை பாழாக்கிய துரோகி அல்லவா நீங்கள்? உங்கள் உயிர் போய் விட்டது...அவளுக்கு யார் இனி கதி? அவள் அண்ணனா? அவள் அப்பாவா? அவள் சகோதரியா? அதுவும் எத்தனை நாள்? நீயென்ன பணக்காரன் பெத்த பிள்ளையா? அவளுக்கு சொத்து சுகம் சேர்த்து வைத்திருக்கிறாயா? மானம் கெட்டவனே! செத்துப் போய்விட்டாய் இப்போது....

தனியாக அவளுக்கு பஸ் ஏறி போகத்தெரியுமா? நீ இல்லாது எங்காவது போயிருக்கிறாளா? அது போகட்டும்....யோசித்துப் பாருடா முட்டாள் நாயே....நீயில்லாத இந்த உலகத்தில் அவளை யாராவது நிம்மதியாக வாழ விட்டு விடுவார்களா? எத்தனை கழுகுகள் இது போல சந்தர்ப்பத்திற்குக் காத்திருக்கிறது..... உனக்கென்ன நீ செத்துப் போய்விட்டாய்.... இதோ உன் விதவை மனைவியை ஓரக்கண்ணால் ரசிக்கும் அடுத்த வீட்டுக்காரனும், அலுவலகத்தில் அவளின் இளமையையும் விதவைத்தனத்தையும் பயன் படுத்தத் துடிக்கும் அவளுடன் வேலை செய்யும் ஆந்தைகள் மத்தியில் இனி எப்படி அவளால் காலம் தள்ள முடியும்? 

நீ உயிருடன் இருந்திருந்தால் இது நடக்குமாடா முட்டாளே...? கட்டிய பெண்ணை அடுத்தவன் பார்த்தாலே பொங்கிய நீ,,,உயிரோடு இல்லாதபோது நடப்பதை எப்படி தடுப்பாய்? மூடனே.... 

யோசித்துப் பார்.....நீ உயிருடன் இருந்திருந்தால் ஒரே ஒரு நொடி.....அது போதும் நீ கத்தியெடுத்து அந்த நீசர்களை விரட்ட.....நீதான் உயிருடன் இல்லையே....

எத்தனை நாள்தான் அவளும் இந்த சமூக அவலங்களுக்கிடையில் வாழ்வாள்? ஒரு நாள் அடி பணிந்து விட்டால்?

தூ! நாயே....உன் ஒருவனால் உன் மனைவியின் மானம் கேட்டு, உன் குடும்ப மரியாதை கேட்டு....பார் வெளியே ...உன்னை தூற்றிக் கொண்டு இருக்கும் ஒரு கும்பலை... இது தான் நீ கேட்டு வந்த வரமாடா? வெட்கமில்லை உனக்கு? 

அப்படி என்னடா இருக்கு சிகரெட்டில? விட முடியாமால் செத்துப் போய்? 

அடுத்து உன் மகன்....உன் தலை மாட்டில் உன் சவ முகத்தில் உட்காரும் ஈக்களை ஓட்டிக் கொண்டு...பாரடா அந்தப் பாலகன் முகத்தை....உன் கைபிடித்து உன்னோடு நடந்தவன்....' மை பாதர் இஸ் கிரேட்' என்று கூடப் படித்தவர்களிடம் சொல்லிவரும் அந்த சிறுவனைப் பார்....நீ செத்து விட்டாய்....கூடவே அவனின் எதிர் காலத்தையும் கையில் கொண்டு சென்று விட்டாய்..... அவனால் இனி படிக்க முடியுமா? நீ இறந்த கவலையோடு கூடவே இன்னும் நிறைய பொருளாதாரக் கவலைகள்....இப்போது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஓடிக் கொண்டிருப்பது என்னவென்று தெரியுமாடா? 'எங்கேயாவது செங்கல் சுமந்தாவது மூட்டை தூக்கியாவது என் அம்மாவையும் சகோதரியையும் காப்பாற்றுவேன்' எனும் உறுதி உள்ளே ஓடிக்கொடிருக்கிறது....

தூ நாயே....உன் மகனை எஞ்சினியர் ஆக்கப் போவதாய் சொல்லி பெருமை பட்டாயே...அதோ பார் நீ செத்து போன பிறகு அந்த நாடார் கடையில் பொட்டலம் கட்டும் பையன் உன் பையன்...அதோ அங்கே குப்பை பொறுக்கும் பையன் உன் பையன்...அதோ அங்கே வாயில் துண்டு பீடி வைத்து ஐந்து ரூபாய் கட்டி சீட்டு ஆடுபவன் உன் பையன்...

இருபது வயதில் அவன் திருட்டு வழக்கில் ஜெயிலுக்குப் போகும்போது போலீஸ்காரன் கேட்கும் கேள்வி

' உன் அப்பா பேர் என்ன? '
'அவன் ஒரு பொறம்போக்கு சார்.....சிகரெட் குடிச்சி செத்துட்டான்...என் சின்ன வயசிலேயே.... அவன் மட்டும் உசிரோட இருந்தா என்னை இஞ்சினியருக்கு படிக்க வைக்கிறேன்ன்னு சொல்லி இருந்தான் சார்' 

நீ அமானுஷ்யமாக அழுதுகொண்டு இருக்கிறாய்....அவன் என்றோ சொன்னது உன் காதில் ஒலிக்கிறது ' மை பாதர் இஸ் க்ரேட்!' 

நீ கடைசியாக இழுத்த சிகரெட் நினிவிற்கு வருகிறதா? என்ன பிரயோஜனம்....நீ இறந்து விட்டாய்...அன்றே நான் ஒரு மடையன் சொன்னேன் சிகரெட்டை விட்டு விடு என்று ...கேட்டாயா? இதோ பார் உன் மீது வெறுப்போடு நானும் உன் சவத்திற்கு மாலை போடுகிறேன் ....படு பாவி ...ராட்சசா ...ஒரே ஒரு வார்த்தை நான் சொன்னதைக் கேட்டிருந்தால் உன் குடும்பத்திற்கு இது நடந்திருக்குமா? 

உன் மகள்..... காலம் புரட்டிப் போட்டுவிட்ட இந்த தற்காலத்தில் பெண் போகப் பொருள் என்று மட்டுமே அறியப் படும் இந்த உலகில் உன் மகள் மட்டும் என்ன எலிசபெத் ராணியா என்ன? படிக்க முடியாமல் போகும் அவளுக்கு இருக்கவே இருக்கிறது ஒரு எக்ஸ்போர்ட் கார்மென்ட் கம்பனி...கூடவே அவளுக்கு சனி ஞாயிறுகளில் கம்பனி குடுக்க வித விதமான ஆண்கள் தயார் .... உன் மகளுடன்...காரணம் அவளாடா? நீதாண்டா மூடா! முட்டாளே...தெரு முக்கில் உன் மகள் நின்று கொண்டிருக்கிறாள்....யாருடனோ வெளியில் செல்ல.....அவளை என்ன ஆகவேண்டும் என்று கனவு கண்டாய்? டாக்டர்? இஞ்சினியர்? CA ? பார் என்ன ஆகி இருக்கிறாள்? எல்லாம் உன்னால்தானடா பிணமே! 

நீதானேடா காரணம்...படித்த முட்டாளே...... நீ என்ன அம்பானி மாதிரி சொத்தை விட்டுச் சென்றாயா? 

கற்பனை செய்....உன் மனைவி இன்னொருத்தன் பிடியில், உன் இஞ்சினியர் மகன் திருட்டு வழக்கில் ...காலம் பூராவும் திருடனாக.....உன் மகளை வாழ விடாத இந்த சமுதாயம்....

எதுவும் செய்ய முடியாமல் உன் மனைவியை எதிரியாய் நினைக்கும் உன் தமக்கைகள்...ஒவ்வொரு நாளும் உன் படத்திற்கு மாலையிட்டு அழும் உன் உயிரினும் மேலான தாய்.....

கற்பனையை நிறுத்து......அழுவதையும் நிறுத்து..... உன் சினிமா முடிந்தது.....காட்சி முடிந்தது....

உன் கண்கள் அழுது உன் மனது கனத்து அடுத்து நீ என்ன சொல்லப் போகிறாய் என்று எனக்குத் தெரியும்....

'என்ன ஆனாலும் சரி....என் புகைப் பழக்கத்தை இந்த நொடியில் விட்டு விட்டேன்' என்று....

நல்லது நண்பா...இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.....வா நல்ல வாழ்க்கைக்கு உன்னை நான் கைபிடித்து அழைத்துப் போகிறேன்...

அந்த வாழ்க்கையில் உனக்கு நோயில்லை...உன் மனைவியில் ஆயுட்கால பாது காவலன் நீ, நீ விரும்பியபடி உன் மகன் ஒரு இஞ்சினியர்...நீ கனவு கண்டபடி உன் மகள் பாதை தெரியாமல் போகவில்லை...நீ கைபிடித்து அழைத்து சென்று அவளை ஒரு நல்லவனுடன் கைபிடித்துக் கொடுக்கப் போகிறாய்....

இனி அடுத்த சிகரெட் உங்களுக்கு பிடிக்க மனம் வராது அப்படி வந்தால் இந்த ஸ்டேடஸ் இல் இட்டுள்ள படத்தைப் பாருங்கள்....ஒருவளை ஒரு ஆணின் கையில் உள்ள அவள் உங்கள் மனைவியாகவோ உங்கள் மகளாகவோ இருக்கலாம்.....

நீ இனி சாகப் போவதில்லை....நன்றாக வாழப் போகிறாய்......

கடவுளுக்கு நன்றி சொல்.....உன்னை சாத்தானிடமிருந்து காப்பாற்றியதற்கு........






No comments: